திங்கள், 10 செப்டம்பர், 2012

வானகம் இயற்கையோடு உறவாட ஒரு வாய்ப்பு

இயற்கை வாழ்வியலின் தந்தை மகாத்மா காந்தியின் " பிறந்த நாளை முன்னிட்டு " காந்தியக் கொள்கையான சுயசார்பு இந்தியாவை" உருவாக்கும் முயற்சியில்

" இயற்கை வேளாண் ஞானியுடன்" வானகத்தில் 15 நாள் சிறப்பு விரிவான " சுயசார்பு வாழ்க்கை பயிற்சி "

கரூர் மாவட்டம் கடவூரில் அமைந்திருக்கும் நமது பண்ணை ஆராய்ச்சி மற்றும் உலக உணவுப் பாதுகாப்பிற்கான நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவமான " வானகம் இயற்கை வேளாண் பண்ணையில் வருகிற செப்டம்பர் மாதம் 24.9.2012 முதல் 8.10.2012 ஆகிய 15 நாட்களில் சிறப்பு விரிவான
இயற்கை வாழ்வியல் பயிற்சி நடைபெறுகிறது.

இந்தப் பயிற்சியில் உழவில்லாத வேளாண்மை,தேனீ வளர்ப்பு பயிற்சி, மண் புழு உரம் தாயரிப்பு, பஞ்சக்காவியா முதல் பூச்சி விரட்டி வரை, பஞ்சக்காவியாவின் மருத்துவப் பயன்கள், மழை நீர் சேகரிப்பு , இயற்கை உணவு தயாரிப்பு, மதிப்பு கூட்டி சந்தைப் படுத்துதல், மாடி வீட்டுத்தோட்டம், மரம் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, பரமரிப்பு மற்றும் மருத்துவம், மருந்து இல்லாத மருத்துவம் குறித்த விரிவான பயிற்சிகள், யோகா பயிற்சி மேலும் பலதரப் பட்ட பயிற்சிகளும் & கலைந்துரையாடல்களும் நடைபெறும். செய்முறைப் பயிற்சி, பார்த்துணர்தல்
மூலம் விரிவான களப்பயிற்சி நடைபெறும்.

இந்த களப்பயிற்சியை " இயற்கை ஞானி நம்மாழ்வார் " அவர்கள் தலைமை ஏற்று நடத்துகிறார்.

ஏங்கல்ஸ் ராஜா இந்த பயிற்சியை வழி நடத்துவதோடு பயிற்சியும் அளிக்கிறார். இதில் சிறப்பு ஆராய்சியாளர்களும் பயிற்சி அளிக்கிறார். பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சிக் கட்டணம் ரூபாய் 3,750/- மட்டும். இயற்கையான தங்கும் சூழலில் கட்டணமில்லா இயற்கை உணவுகளும் வழங்கப்படும்.

முன்பதிவு அவசியம் . மேலும் விவரங்களுக்கு
தொலைபேசி எண் : 94880 55546
பயிற்சி கட்டணத்தை செலுத்த வேண்டிய மணி ஆர்டர் முகவரி :
M. செந்தில் கணேசன்
வானகம் ( நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்) ,
சுருமான் பட்டி, கடவூர் அஞ்சல், கரூர் மாவட்டம் - 621 311

இயற்கை பயிர் செய்யும் நாமெல்லாம் அதன் பிள்ளைகளாகவே இருப்போம்.
மருந்தே இல்லாத உடல் நலம்
மருத்துவமே தேவை இல்லாத மனித குலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக