வெள்ளி, 7 செப்டம்பர், 2012

இயற்கையின் குரல்

மாலை நேரம் 
மனதை மயக்கும் மந்தகாசம் கேட்டு 
யார் என்றேன்?
இயற்கை - ஒலித்தது பதில்குரல்
நலமா என்றேன், அகம் மகிழ்ந்து
வெறுமையான புன்னகை அன்னை அவள் முகத்தில்.
என்ன சோகம் என்றேன்
எல்லாம் சோகமே என்று - தொடர்ந்தது அக்குரல்
சுகம் வேண்டி பொருள் தேடி
பொருளே தோன்ற எனை மறந்தார் இந்த மானுடர்
என் துன்பம் அவர் துன்பம் என்பதும் மறந்து
என் முகம் அதைச் சிதைக்கிறார்!
சிதயாதிருப்பது என் பொறுமை ஒன்றேயாம்
அதுவும் சிதைந்தால்.....
எச்சரிக்கை என்றே கொண்டேன் அக்குரலை
செவி மறுத்தால்?
சொல்வதற்கு யானிருப்பேன் கேட்பதற்கு....
முடிக்க மனமின்றி மறைந்தாள் என் விழிகளில்
திகைத்து நின்றேன் யான் செய்வதறியாது.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக